ஞாயிறு, 16 ஜனவரி, 2011

மதுரை வீரன் vs பெரியண்ணன் (2011-01-14)

அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே....
எஸ் உங்களுக்காகவே, பொங்கல் சாப்டுங்க மக்கா..

கடந்த வியாளன் ஆட்டத்தில் நடந்த சில நிகல்வுகளை இங்கே பகிர்கின்றோம்....
-------------------------------------------------------------------------------------------------------------

அண்ணா பெரியண்ணா என்ன ஆச்சி இந்த வாரம்?? நீங்க சொன்னமாதிரி இனிமேல் ஆட்டத்துக்கு வரும்போது அவுங்களா எலுப்ப சொல்லாதீங்கன்னா? ஏன்னா அது உங்களுக்கு ராசியாவும், எனக்கு பெரிய்ய ஆப்பாவும் அமையுது அண்ணே. :-( . 
நான் பந்து வீசும்போது பெரியண்ணன் பிரிச்சி மேஞ்சிட்டார்.. அண்ணே ஏன் இப்படி திடீர்னு கெளம்பிட்டீங்க?? நீங்க பிரிச்ச பிரில அந்த 50 அடிக்கும் குட்டி என்னைய என்னமா ஒட்டுச்சி தெரியுமா? டேய் இதையும் பிளாக் ல எழுதுடானு சொன்னான்.. ஆனா சூறாவளி சுத்தி சுத்தி அடிக்கும்னு அவனுக்கு ரொம்ப தாமதமாதான் புரிஞ்சது இல்லாட்டி பொள்ளாச்சி மாப்ளை போட்ட முதல் பந்துலயே கடந்த வாரம் போலவே அவனை வீட்டுக்கு அனுப்பிட்டாங்களே..!! :-)

-------------------------------------------------------------------------------------------------------------
ஆட்டத்தில் கலந்துகொண்ட சீமென்ஸ் குரூப், அல்பனார் குரூப், ரசபாலயத்து  ராசா குரூப் & மிக முக்கியமான நம்ம சாமி/திருப்பாச்சியின் குரூப்... சீமென்ஸ் பசங்க நிஜமாவே ரொம்ப சரியா 5 மணிக்கெல்லாம் வந்துட்டாங்க, மிக்க நன்றி ராஜிவ், சக்தி & கோ..  எங்கள் சங்க பொருளாளர் தலை வராதது கொஞ்சம் வருத்தமளித்தது.. சாமி/திருப்பாச்சி குரூப் மிக தாமதமாக வந்தால் நாங்கள் முதல் ஆட்டத்தை தொடங்கி விட்டோம், பின்னர் அவர்களுக்காக அடுத்து ஒரு ஆட்டத்தை தொடங்கினோம், அதில் திருப்பாச்சி போட்ட பந்தை யாராலும் தொட கூட முடியவில்லை, ஆனாலும் அடுத்து இறங்கிய எங்கள் சங்க உறுப்பினர் செந்தில் மட்டுமே அந்த அதிவேக பந்தை அடித்து விரட்டினார். வாழ்த்துக்கள் திருப்பாச்சி & செந்தில்.. நீங்கள் இருவருமே கில்லிஸ்‌ அணியின் மிக முக்கியமான நட்சத்திரங்கள்...  
-------------------------------------------------------------------------------------------------------------
கடந்த வாரத்தில் மிகவும் ஜொலித்த நட்சத்திரம் வேற யாரு நம்ம பெரியண்ணன் தான்.. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வீறு கொண்டு எழுந்த பொள்ளாச்சி மாப்ளையும் பெஸ்ட். ஆனால் அவர் மாட்டை சாரி மட்டை அடிப்பதை விட பந்து வீச்சில் மட்டுமே ஜொலித்தார்.. பிரவீன் & முருகன் மிதமான ஆட்டம் ஆடினார்கள், ஆட்டம் சூடு பிடிக்கவில்லை, ஒருவேல மீட்டிங் போணும்னு அவசரத்தில் வந்ததால் இருக்கலாம்.. ஆனாலும் பிரவீன் ஒரு மிக பெரிய்ய கில்லி என்பதை எல்லாருக்கும் முந்தின வாரமே நிரூபித்துவிட்டார்....  புரட்சிபுயல் பற்றி சொல்லவே வேணாம்.. 
-------------------------------------------------------------------------------------------------------------
புரட்சி புயல் பற்றி சொன்னால் அது எங்களையே நாங்கள் புகழ்வதுபோல, அவரின் நேர்த்தியான பந்துவீச்சும், துல்லியமான மட்டை அடியும் அசத்தல்.. அவருக்கு ஏன் புரட்சி புயல் என பெயர் வைத்தோம் என நண்பர் கேட்டார் அவருக்கு நான் சொல்வது யாதெனில், வந்து அவர் ஆடுவதை (வீட்ல போடுற டான்ஸ் இல்ல) மைதானத்தில் ஆடுவதை பார்த்துதான் இந்த காரணப்பெயர்.. நன்றி புரட்சி புயலே.. நம்ம திரு திரு துரு துரு மாப்ளை அடங்கவே மாற்றான், அவன் எந்த டீம் க்கு போனாலும் என்மேல ஒரு டிரைய்யல் பந்தாவது போட்டு என்னய்யா டேமேஜ் பண்ணுறான்..
-------------------------------------------------------------------------------------------------------------
மதுரை வீரன் இந்த வாரம் அணித்தலைவராக இருந்ததால் அணியை சிறப்பாக வழி நடத்துவதிலேயே குறியாக இருந்தார்.. ராசபாளையத்து ராசா இந்த வாரம் புது தோற்றத்தில் வந்து அதிரடி ஆடி விட்டார்.. இன்னும் கொஞ்சம் கூர் தீட்டினால் நீங்க எங்கயோ போய்றுவீங்க. அவரின் நண்பரும் சிறப்பாக பந்து வீசினார்..
-------------------------------------------------------------------------------------------------------------
சீமென்ஸ் சக்தியின் பந்து வீச்சில் நல்ல முன்னேற்றம், இரண்டாவது ஆட்டத்தில் அவரின் பந்து வீச்சு என்னை மிகவும் கவர்ந்தது, அதிலும் 2 விக்கெட் வேற அசத்தல் நண்பா... அடுத்து ராஜிவ் பேட்டிங் இல் நல்ல முன்னேற்றம், நல்ல பயிற்சி எடுத்தால் நமக்கு ஒரு சேவாக் கிடைக்கலாம்... கார்த்திக் உங்க தன்னம்பிக்கை ரொம்ப பிடிச்சி இருக்கு... இன்னொரு நண்பர் கீலா விலுந்தார் அப்போ கொஞ்சம் எல்லாரும் ஷாக் ஆகிட்டாங்க... அடுத்த வாட்டி பாட்டு விளையாடுங்க...
-------------------------------------------------------------------------------------------------------------
சொதப்பல் மன்னர்கள்: இந்த வாரம் அதிகம் சொதப்பியது இந்த சாத்தூர் சிங்கமும், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தாஸ் உம் தான்... நான் வீசிய முதல் ஓவரில் சுமார் 23 ரன்களை விலாசி எனக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துவிட்டார் பெரியண்ணன்.. திரும்ப போட்ட அடுத்த ஓவர் நன்றாகவே வீசினேன்..  என்னை முதல் ஆளாக பேட்டிங் பிடிக்க இறக்கினார் எங்கள் காப்டன் மதுரைவீரன் ஆனால் சுமார் 3 ஓவர் வரை வெறும் 8 ரன்களை மட்டுமே அடித்து போல்ட் ஆனேன்.. 

அடுத்த சொதப்பல் முந்தின வாரத்தில் பிரவீனால் போல்ட் ஆக்கப்பட்ட, மேலும் என்னை போல்ட் ஆக்கிய தாஸ் அவரை இந்த வாரம் அநியாயதுக்கும் எதிர்பார்த்தேன், ஏன்னா அவரை பற்றிய பரப்புரையே காரணம்.. அவர் அல்பானர் டீமில் கடந்த 8 மாட்ச் இல் 6 முறை 50 ரன்களை அடித்துள்ளார் என கூற கேட்டதுதான், அதை அவரும் சொல்லியதால் கொஞ்சம் மிரட்சி ஆனால் இந்த வாரம் முதல் பந்திலேயே பொள்ளாச்சி மாப்ளையிடம் கேட்ச் கொடுத்து பரிதாபமாக வெளியேறினார்.. :-( இதேர்க்கெல்லாம் சேத்து வச்சி நீ கொடுக்க ரெடியாக இருப்பை என தெரியும்.. 
-------------------------------------------------------------------------------------------------------------
ஆட்டத்தின் நாயகன் & விண்ணிங்க் காப்டன் வேற யாரு எங்கள் வீரத்தின் விளக்கம், விடிவெள்ளி, குடிதாங்கி, காவலன், பொன்மனச்செம்மல், எங்கள் சங்க ஆலோசகர், நாளைய முதல்வர், அடுத்த பிரதமர், ஜனாதிபதி, எகிறி அடிக்கும் கில்லி, எதிர்கால அமெரிக்க ஜனாதிபதி, ஜெகதள பிரதாபன்,& etc... பெரியண்ணண்ணுக்கு வாழ்த்து சொல்கிறது மதுரை வீரன் டீம்..
கண்ணா மூச்சி ரே ரே, கண்டு பிடி யாரே...
எவன் பந்து போட்டாலும் குடிப்பேன் சாரி அடிப்பேன் என கூறும் குடிதாங்கி..
ரெண்டு காப்டனும் கை கொடுக்கும் காட்சி.

-------------------------------------------------------------------------------------------------------------
எல்லாம் சும்மா காமெடி குதான் தேவை இல்லாம கோவப்பட்டு ஒடம்ப புண்ணாகிக்காதீங்க மக்கா.. அதுக்கு நான் பொறுப்பல்ல.. முடிஞ்சா 2 கமெண்ட் போட்டுட்டு போங்க...

-------------------------------------------------------------------------------------------------------------
ஓகே இப்போ நாம் எடுத்த புகைப்படங்கள்.. எனக்கு அலுவலகத்தில் வேலை ரொம்ப ரொம்ப ஜாஸ்தியா இருக்கு, சோ இந்த போட்டோக்கு எல்லாம் கமெண்ட் போட முடியல, தப்பா எடுத்துக்காதீங்க..(இதுக்கே ரொம்ப கஷ்டப்பட்டு தான் நேரத்தை ஒதுக்குனேன்) முடிஞ்சா நீங்களே கம்மெண்ட்ஸ் ஏரியால போடுங்க நண்பர்களே...






























Note : போட்டோவ கிளிக் பண்ணி பெருசா பாருங்க.....  தமிழ் எழுத்து பிழை அதிகம் இருக்கும் அதற்க்கு மண்ணிக்கவும்.. போக போக சரி செய்து கொள்ளலாம்..


கமெண்ட்ஸ் நகைச்சுவைக்கு மட்டுமே, யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல...




என்றும் அன்புடன், 
உங்கள் சாத்தூர்..

9 comments:

பெயரில்லா சொன்னது…

சாத்தூர் சிங்க‌ம்,

அடுத்த‌ முறை திரு திரு துரு துரு ப‌ந்து போடும் போது மிக‌ க‌வ‌னமாக‌ இருக்க‌வும், ஏன்னா? சுவ‌ர் இருந்தாதான் சுண்ணாம்பு அடிக்க‌ முடியும்.

இப்ப‌டிக்கு

ந‌ல‌ம் விரும்பி
ஊர் பெய‌ர் வெளியிட‌ விரும்பாத‌ வெளியூர் வாச‌க‌ர்

சாத்தூர் சிங்கம் சொன்னது…

@ பெயரில்லா

வெளியூர்ணா பன்ரூட்டி மாதிரி இருக்குமா தல??!!!!
முடிஞ்சா 2 பண்ணு & ரொட்டி அனுப்பி வைங்க தல...

உங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி...

மதுரை வீரன் சொன்னது…

யாரையும் புண்படுத்தாத உங்கள் நடுநிலையான நகைச்சுவை வர்ணனைக்கு நன்றி,,,

மதுரை வீரன் சொன்னது…

எல்லா படங்களிலும் ராஜிவ் நெஞ்சில் ஒரு ஒளி வட்டம் தெரிகிறதே!!!!! புது சட்ட,,, புது காலணி,,, புது காரு,,,, கலக்குறீங்க,,,,
(போட்டோ புடிப்பதில் எங்கள் பிரபுவையே மிஞ்சிடிங்க போங்க,,,)

மதுரை வீரன் சொன்னது…

பெரியண்ணா கட்சி எதும் ஆரம்பிச்சூடீங்களா?,,,
கட்சி மாநாட்ட மலாஸ் மைதானத்திலெயே வைச்சுகலாமா?

மதுரை வீரன் சொன்னது…

பெரியண்ணா வீட்டில பூஸ்ட் ஏதும் குடிச்சுட்டு வந்தீங்களா?
என்ன அடி,,, பந்தையே கிழி,,, கிழினு,,, கிழிசூடீங்க,,,
கடந்த வாரம்,,,முத்தவாவை பார்த்து ஓடினோம்,,,
இந்தவாரம்,,,, நீங்க அடிச்ச பந்தை தேடி ஓடினோம்,,,
(ம் ம் ம் வாரா வாரம் இப்டி ஓடி கிட்டு தான் இருக்கோம்,,,
நல்ல ரண்னிங் பிர்யாக்ட்ஸ் கொடுத்தத்துக்கு நன்றி)
தொப்பைய கோரைக்க,,, டெலிஷாப்பிங்ல காசு கொடுத்து ஏதும் வாங்க வேண்டாம்
வியாழ கிழமை மலாஸ் மைதானத்தில் எங்கள் பெரியண்ணா அடிக்கும் பந்தை பிடித்தாலே போதும்,,,,

பெயரில்லா சொன்னது…

சாத்தூர் சிங்கத்தின் ஒவ்வொரு பதிவிற்கும் பின்னூட்டம் இட்டு அவரை உற்சாகப்படுத்தும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

Suresh

Sundar.B சொன்னது…

pongala photola mattum kaati yemathitengale.....!!!!!!!!

antha naal neabagam nenjile vanthathe nanbane nabane....!!!!!!!(konjam oveara irrukula :-?)

please guide for others ghillys who dont know tamil typing(like me).

Siva சொன்னது…

good...

கருத்துரையிடுக

திருக்குறள்