திங்கள், 10 ஜனவரி, 2011

பொள்ளாச்சி மாப்ளை vs ராசபாளையத்து ராசா (2010-01-06)

நண்பர்களே, எல்லார்க்கும் வணக்கம்.....

கடந்த வியாளன் மாலை மிக மிக அருமையான ஆட்டம் அமைந்தது.. இதுவரை சரித்திரத்தில் கூட விளையாட 28 ஆட்டக்காரர்கள் வந்து இருக்க மாட்டார்கள், தாமதமாக வந்து விளையாட முடியாமல் மைதானத்திர்க்கு வெளியே இருந்து பொறுமையாக ஆட்டத்தை ரசித்தும், நாம் அனைவரையும் ஊக்கப்படுத்திய சீமென்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.. இந்த வாரமாவது சீக்கிரமாக 4.30 குல்ல வந்துவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

புதிய கார் வாங்கி, சுட சுட இனிப்பு & காரம் வழங்கிய வீராசாமியை போல பட் பட்டென முடிவெடுக்கும் நண்பர் ராஜிவ்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... பாத்து வண்டிய ஓட்டுங்க தலைவா..

எதிர்பாரா விருந்தாளிகள் 3 பேர் அல்பனாரில் இருந்து வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.. அவர்களுக்கும் மிக்க நன்றி.. அதில் ரொம்ப எதிர்பார்த்தது 50 அடிக்கும் குட்டியைதான் ஆனால்

அவரை பொட்டில் அடித்தாற்போல் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஒரே பந்தில் க்ளீன் போல்ட் ஆக்கிய எங்கள் நண்பர் பிரவீன் அவர்களை மனமார வாழ்துகிறது பொள்ளாச்சி மாப்ளை டீம்.. இந்த சாகசத்தால் ஆட்டத்தின் போக்கே மாறிவிட்டது எனலாம்..

திருப்பாச்சி வழக்கம் போலவே பின்னி பெடல் எடுதுட்டான்.. வாழ்துக்கள்.. 1 பந்து விதியாசத்தில் வெற்றி பெற்ற ராசபாளையத்து ராசா அணிக்கு வாழ்த்துக்கள்....

ஆட்டத்தை கலகலக்க வைத்த சம்பவம்:
ஆனாலும் இந்த முத்தாவா திடீர் என்ட்ரி குடுத்து நல்லா பீதிய கிளப்பீட்டாங்க, அது எப்படித்தான் சத்தமே இல்லாம இப்புடி வந்தாங்கலோ? ஆட்டத்தில் புகுந்து பெரிய புரட்சியே பண்ணிட்டாங்க, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துட்டாங்க...

நானும், பொள்ளாச்சி மாப்ளை, திரு திரு & 5 பேர் பேசிக்கிட்டு இருந்தோம், அந்த பக்கம் மதுரைவீரன் & புரட்சி புயலும் சீமென்ஸ் குரூப்கு எங்க போய் சாபிடலாம்னு இடம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க, மைதானத்தில் எதிர் அணி விளையாடிக்கொண்டு இருந்தது, பிரவீன் நடுவராக இருந்தார், ஆனா இந்த முத்தவா வந்த ஒடனே ஒருத்தனையும் காணோம், எனக்கு முன்னாடி 2 பேர் ஒடுநாணுக அவணுகல ஃபாலோ பண்ணி ஓடு ஓடு நு கத்திக்கிட்டே நானும் பின்னங்கால் பிடறியில் அடிக்கும் அளவுக்கு ஓடிட்டு இருந்தேன், என் கூட திரு திரு வும், காயத்தார் நண்பரும் வந்தாங்க, ஓடி போய் ரோட்டைஎல்லாம் தாண்டி போய் பார்த்தா நம்ம பொள்ளாச்சி மாப்ளை மாட்டிக்கிட்டார், கொஞ்சம் வருத்தமா இருந்தது, திரும்ப அவரை விட்டுட்டு இருக்குற ஸ்டெம்ப், பேட் எல்லாம் தூக்கிக்கிட்டு கெளம்ப போகும்போது பெரியண்ணனும், பிரவீனும், தாஸ் உம் சென்று பேசி திரும்ப வாங்கி வந்தார்கள், இதை எல்லாம் 1 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தோம், கொஞ்சம் தள்ளி மதுரை வீரனும், புரட்சி புயலும், சீமென்ஸ் குரூப் அப்டியே சைலேண்டா வண்டிக்குள்ளவே அமுங்கிட்டாங்க... ஆனா மீதி ஆளுக எல்லாம் என்கண்ணே தெரியல, எல்லாம் சும்மா தெறிச்சி ஓடி போயிட்டாங்க... இதுல எங்க தல எங்கன்னே தெரியல.. :-)...

 எப்படியோ நல்லா ஓடி பயிற்சி எடுத்ததுதான் மிச்சம்.. அடுத்தவாரம் எல்லாரும் சீக்கிரம் வந்துருங்க 4.30 to 5.00 pm குல்ல. மேலும் சலா நேரத்தில் விளையாடுவதை தவிர்த்துவிடலாம்..  எனக்கெல்லாம் கொஞ்ச தூரம் ஒடுநாலே மூச்சு வாங்கும் ஆனா இந்த முத்தவா பார்த்த ஒடனே எப்டிதான் இவளோதூரம் ஒடுநேனோ தெரியல... :-)

எதர்க்கும் பயப்பிடாம நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நின்ற பெரியண்ணன், பிரவீன், தாஸ்,  மற்றும் சிலருக்கு வாழ்த்துக்கள்.. சட்டையை பிடித்து உலுக்கியும் அசராத அஞ்ச நெஞ்சன் பொள்ளாச்சி மாப்ளைக்கும் வாழ்துக்கள்... எங்க நின்னார், எங்க போனார் அப்டினு எதுமே தெரியாம மாயாவி வேலை காண்பித்த புதிய கார் வாங்கிய வேந்தன், புதிய மாப்ளை முருகனுக்கும் வாழ்துக்கள்(ஆமா எப்டி பாஸ் இப்டி)

மதுரை வீரனும், புரட்சி புயலும் எங்க போனாங்கன்னே தெரில ஆனா கடைசில பெட்ரோல் பங்க்ல தலை தெரிந்ததாக உளவுத்துறை சொல்ல தெரியும்..

அது எப்படியோ எல்லாம் அரசியலில் சகஜமப்பா... இனி புகைபடங்கள் உங்கள் பார்வைக்கு..
சாமியிடம் ஆசீர்வாதம்.. முகத்தில் தேஜஸ் பாருங்க (அடுத்த
நித்யானந்தாவாக வார எல்லா தகுதியும் உள்ளவர்)

Bengal Tiger Possing 

what are you trying Mr.Shameim?

மைதானத்தில் பொள்ளாச்சி மாப்ளை & மதுரை வீரன்

ஒரு ஸ்டெம்ப் வச்சா கீல விலுகுதாம் அதான் 2 ஸ்டெம்ப்
வச்சி டெஸ்ட் பண்றங்கோ.!!

இவர் இன்னைக்கு 50 அடிப்பாரா?? இல்ல முட்ட வாங்குவாரா?

ஒரு ஸ்டெம்ப் இங்க அப்டின்னா இன்னொன்ன அங்க
போயி வைங்கடா..

மதுரை வீரன் பந்து வீசுவதை அமெரிக்க உளவாளி எதிர்புறம்
உள்ள கட்டிடத்தில் இருந்து பிளாஷ் அடிப்பதை காணலாம்.

சாத்தூர் சிங்கம் மட்டையை விளாசும்போது எடுத்தது.


ரன் மழை பொழியும் பிரவீன்  
strike batsman & score writer 
நடுவில் புது மாப்பிள்ளை, புது ஹோண்டா ஒனர் முருகர்

சுட சுட இனிப்பு/காரம் கொடுத்து உற்சாகப்படுத்தும் ராஜிவ்

ராஜிவ் வாய்ல இனிப்பை திணிக்கும் பொள்ளாச்சி மாப்ளை.

இனிப்பை ஆர்வமாக சாப்பிடும் கில்லிகல். இந்த ஆர்வத்த
ஆட்டதிலையும் காண்பிக்கப்பா 

இந்த இனிப்புக்காகவே நான் அவுட் ஆகி வந்தேன் என சிரிக்கும் கார்த்திக் & கோ.

புதிய ஹோண்டா காருடன் ராஜிவ், கார்த்திக் & நண்பர் 

சீமென்ஸ் குரூப் மொத்தமா விளம்பரம் கொடுக்குறாங்க..

கைய்யை தட்டி உற்சாகப்படுத்தும் பிரவீன், ஆனால்
ஃபோட்டோக்கு சரியா போஸ் மட்டும் கொடுக்கும் புது மாப்ளை.!!

தாஸ்ஐ ஒரே பந்தில் போல்ட் ஆக்கிய பிரவீன் & வேடிக்கை மட்டும்
பார்த்த புத்தம் புது ஹோண்டா ஒனர் & புத்தம் புது மாப்ளை. 

நம்ம திரு திரு துரு துரு மாப்ளையுடன், பவ்வியமான புரட்சி புயல்.

தலை மறைவாக உள்ள மினி நிதயானந்த ஸ்வாமிகளுடன்
சாத்தூர் சிங்கமும், மதுரை வீரனும்..

மங்களம் உண்டாகட்டும், மங்களம் உண்டாகட்டும், (ஏன்டா மங்களம்
மட்டும் உண்டான போதுமா? த்ரிஷா, ரஞ்சிதா எல்லாம் உண்டாக கூடாதா?)

சவுதியில் வெற்றிகரமாக 1001 வது கிளையை தொடங்கிய மகிழ்ச்சி
 பெருக்கொடு ஸ்வாமிகள் ஆசீர்வாதம் தரும் காணக்கிடைக்காத
 புகைப்படம் அதை ஓரத்தில் இருந்து ரசிக்கும் திருப்பாச்சி. இந்த
ஸ்வாமிகளை அடுத்த வாரம் முதல் பார்ப்பது அரிதினும் அரிது
 (ஏண்டா போலீஸ் பிடிக்க போதா?)




Note : போட்டோவ கிளிக் பண்ணி பெருசா பாருங்க.....  தமிழ் எழுத்து பிழை அதிகம் இருக்கும் அதற்க்கு மண்ணிக்கவும்.. போக போக சரி செய்து கொள்ளலாம்..

கமெண்ட்ஸ் நகைச்சுவைக்கு மட்டுமே, யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல...




என்றும் அன்புடன், 
உங்கள் சாத்தூர்..



11 comments:

மதுரை வீரன் சொன்னது…

சரித்திரம் படைத்த மாட்ச் அது,,,
ரன் எடுக்க கூட இவ்ளோ வேகமா ஓடி பார்த்தது இல்ல,,,
அப்புடி ஒரு ஓட்டம்,,,
எல்லோரையும் ஒலிம்பிக்ல ஓட விட்டிருந்தா,,,
இந்தியாவுக்கு கோல்ட் மெடல் உறுதி.

மதுரை வீரன் சொன்னது…

முத்தவ வந்த கூட முத்தம் கொடுத்து பேசுவோம்னு
நின்று பேசிய பொல்லாச்சி மாப்பிள்ளை மன தைரியத்தை கண்டிப்பா பாராட்ட வேண்டும்.
(அட பொங்கப்பா ஸ்கோர் நோட் பண்ணிக்கிட்டு இருந்த என்ன நோட் பண்ணி ஓட கூட டைம் கொடுக்காம கோழி புடிகிர மாதிரி புடிச்சுடாங்க, இருந்தாலும் அஞ்ச நெஞ்சன்னு சொல்லிட்டாங்க ம் ம் ம் இன்னும் நம்மள நம்புரங்க,,,, அப்படியே மைன்டைன் பண்ணுவோம் என்ற மாப்பிள்ளையேன் மைண்ட் வாய்ஸ் கேக்குத்து)

மதுரை வீரன் சொன்னது…

ஆனாலும் ஓடிய அனைத்து நல்ல உள்ளங்களையும் பாராட்டியே ஆக வேண்டும்,,,
ஏனா,,, யாரை புடிப்பது என்று முத்தவஉக்கேய் கண்ஃப்யூஸ் ஆகுற அளவுக்கு
அனைத்து திசைகளிலும் அற்புதமாக ஓடிய அனைவருக்கும் பாராட்டுகள்,,,
பாவம் மாப்பிள்ளை தான் மாட்டி கொண்டார்,,, டிரைய்னிங் பத்தளையோ,,,,,

மதுரை வீரன் சொன்னது…

சாமின் குறும்புகள்,,,,
குறும் தகடு எப்போ வெளியீடுவீங்க,,,

பெயரில்லா சொன்னது…

"கமெண்ட்ஸ் நகைச்சுவைக்கு மட்டுமே, யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல..."

பான்ட் சைஸ் கொஞ்ச‌ம் பெருசா போட்டிருக்கலாம்

ASK

பெயரில்லா சொன்னது…

Actula அன்னைக்கு நானும் ம‌துரை வீர‌னும் ப‌க்க‌த்துல‌ இருக்கிற க‌டைக்கு டீ சாப்பிட‌ சென்றோம்! நாங்க‌ள் ஒடிய‌தாக‌ யாரோ உங்க‌ளுக்கு த‌ப்பான‌ தக‌வ‌ல் கொடுத்திருக்க‌ங்க‌! உடனே ம‌றுப்பு அறிக்கை வெளியிடும்ப‌டி கேட்டுக்கொள்கிறோம்!


ம‌துரை வீர‌ன் & ASK

சாத்தூர் சிங்கம் சொன்னது…

@ மதுரை வீரன்...

முதல் கருத்துக்கு நன்றி.. ஆமாங்க ஒலிம்பிக் போயி இருந்தா நிச்சயம் கில்லிஸ்‌க்கு தங்கம் கிடைத்து இருக்கும்..

சாத்தூர் சிங்கம் சொன்னது…

@ மதுரை வீரன்...

ஆமா ஆமா அவர் அஞ்சா நெஞ்சனே தான்... இப்டியே மெயிண்டைன் பண்ணுங்க பொள்ளாச்சி மாப்ள..

சாத்தூர் சிங்கம் சொன்னது…

@ மதுரை வீரன்...

ஹா ஹா கண்டிப்பா அப்படி சேதறி நாளா பக்கமும் ஓடியதால்தான் தப்பித்தோம்... சரியாக சொன்னீர்கள்... ஆமாம் இன்னும் நல்ல ட்ரைனிங் வேணும் பொள்ளாச்சி மாப்ளைக்கு.. சாமியின் குறுந்தகடு விரைவில் சன் அல்லது கழைஞ்சர் தொலைக்காட்சியில் வெளியாகும்..

சாத்தூர் சிங்கம் சொன்னது…

@ புரட்சி புயல்..

நீங்க சொன்னபடி பாண்ட் அளவை அதிகரித்து விட்டேன்.. கருத்துக்கு நன்றி..

சாத்தூர் சிங்கம் சொன்னது…

@ புரட்சி புயல் & மதுரை வீரன்..

ஆமா சலா நேரத்துல எந்த நாயர் டீ கடையை திறந்து வச்சி டீ ஆத்திக்கிட்டு இருக்கான்???!!!

உங்க சமாளிப்புக்கு அளவே இல்லையா?? சரி சரி அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா..... :-)

கருத்துரையிடுக

திருக்குறள்