செவ்வாய், 10 மே, 2011

தேர்ச்சி விகிதத்தில் வழக்கம் போல விருதுநகர் முதலிடம்

பிளஸ்டூ தேர்வு தேர்ச்சி விகிதத்தில் வழக்கம் போல விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

தமிழகத்திலேயே விருதுநகர் மாவட்டம்தான் எப்போதும் பத்தாவது மற்றும் பிளஸ்டூ தேர்வுகளில் அதிக அளவிலான தேர்ச்சி விகிதத்தைப் பெற்று வருகிறது. இந்த ஆண்டும் அது தொடர்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 19,032 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இவர்களில் மாணவியர் எண்ணிக்கை மட்டும் 9896 ஆகும். இவர்களில் 18,094 மாணவ, மாணவியர் பாஸாகியுள்ளனர். இது 95.07 சதவீதமாகும். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 93.18 சதவீதம். மாணவியரின் தேர்ச்சி விகிதம் 96.70 சதவீதம்.

கடந்த 25 வருடங்களாக பிளஸ்டூவில் விருதநகர் மாவட்டம்தான் தமிழகத்திலேயே அதிக அளவிலான தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது சாதனை விஷயமாகும். இங்குள்ள பள்ளிகளில் பாடம் நடத்தப்படும் விதம், மாணவ, மாணவயரின் படிப்பு ஆர்வம் என பல அம்சங்கள் இதற்குக் காரணமாக உள்ளன. சிறந்த ஆசிரியர்களும் ஒரு முக்கியக் காரணமாகும்.




0 comments:

கருத்துரையிடுக

திருக்குறள்